நாடு முழுவதும் சராசரியாக 20% பேர் குணமடைந்தனர்.!

நாடு முழுவதும் கொரோனாவால் சராசரியாக 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 6430 பேரும், குஜராத்தில் 2624 பேரும், டெல்லியில் 2376பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், நாடு முழுவதும் சராசரியாக 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், கோவா, மிஸ்ரோம் , திரிபுரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு 100 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025