தற்காலிக சபாநாயகர் நியமனம் ! உத்தவ் தாக்கரே அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
முதலில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார்.இவர்க்கு ஆளுநர் கோஸ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.இவரது நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இதில்,இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு இடையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்தார்.பின்பு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.புதிய எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பட்நாவிஸ் ராஜினாமா செய்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் – சிவசேனா ஆகிய கட்சிகள் சார்பில் சிவசேனா தலைஆவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது .இதனால் மகாராஷ்டிராவின் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேசியவாதகாங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.