மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற கூட்டதொடரில் அதானி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு பரிசு பொருட்கள் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு , பாராளுமன்ற ஒழுங்கு விசாரணை குழு அவர் மீது விசாரணை நடத்தியது. மேலும், அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியது.
இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், கொல்கத்தாவில் ஒரு விழாவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து நீக்க பாஜக திட்டமிட்டு வேலை செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜகவின் இந்த செயல்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் (மஹுவா மொய்த்ரா) பிரபலமடைய உதவும். அவர் இதுவரை பாராளுமன்றத்திற்குள் பேசியதை இனி வெளியே பேசுவார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி கூறினார்.
மம்தாவின் கருத்து குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே, ‘ பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்பது உண்மை. மஹுவா விவகாரத்தில் பாஜக நடவடிக்கையில் எனக்கு ஆச்சரியமில்லை. மம்தா பானர்ஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் இந்தியாவின் முக்கிய தலைவர். மம்தா ஒரு போராளி என்று எனக்குத் தெரியும். மம்தா ஒரு வெற்றியாளரும் கூட.’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…