பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி.! மம்தா கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி ஆதரவு.!

West Bengal CM Mamata banerjee - NCP MP Supriya Sule

மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற கூட்டதொடரில் அதானி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு பரிசு பொருட்கள் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு , பாராளுமன்ற ஒழுங்கு விசாரணை குழு அவர் மீது விசாரணை நடத்தியது. மேலும், அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியது.

இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், கொல்கத்தாவில் ஒரு விழாவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து நீக்க பாஜக திட்டமிட்டு வேலை செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.

ஊழல், கலவரம் உள்ளிட்டவையில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியது காங்கிரஸ் .. கடைசி நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

மேலும், பாஜகவின் இந்த செயல்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் (மஹுவா மொய்த்ரா) பிரபலமடைய உதவும். அவர் இதுவரை பாராளுமன்றத்திற்குள் பேசியதை இனி வெளியே பேசுவார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி கூறினார்.

மம்தாவின் கருத்து குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே,  ‘ பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்பது உண்மை. மஹுவா விவகாரத்தில் பாஜக நடவடிக்கையில் எனக்கு ஆச்சரியமில்லை. மம்தா பானர்ஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் இந்தியாவின் முக்கிய தலைவர். மம்தா ஒரு போராளி என்று எனக்குத் தெரியும். மம்தா  ஒரு வெற்றியாளரும் கூட.’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்