தேசிய வாக்காளர்கள் தினம் – இளம் வாக்காளர்களுடன் இன்று உரையாடும் பிரதமர் மோடி!

pm modi

குடியரசு தேசத்தில் வாக்களிப்பது என்பது அவசியமான கடமைகளில் ஒன்றாகும். தேசம் நமக்கு அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், தேசத்துக்கு நாம் ஆற்றும் ஜனநாயக கடமை என்பது மிக முக்கியமானது. இந்த சூழலில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வாக்களார்கள் தினம் இன்று (ஜன.25) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.  18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க காண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அடையாளம் காண நாடு தழுவிய முயற்சியைத் தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து செயல்பட்டு வருகிறது. அத்தகைய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும். அந்தவகையில், 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குடியரசு தினம் 2024: அணிவகுப்புக்கான நேரம் முதல் சிறப்பு விருந்தினர் வரை முழு விவரங்கள்!

இந்த நிலையில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாட உள்ளார். இதில், சுமார் 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமருடனான உரையாடலில் இணைய உள்ளனர். இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து பாஜக கூறியதாவது, தேசிய வாக்களார்கள் தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி இளம் வாக்காளர்களுடன் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,000 இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமருடனான உரையாடலில் இணைவார்கள். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றுள்ளனர். இதனிடையே, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு டெல்லியில் தேசிய விழாவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இவ்விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்