தேசிய விளையாட்டு தின ஸ்பெஷல்.! ஆக்சன் ஹீரோவாக மாறிய ராகுல் காந்தி.!

Congress releases video of Rahul Gandhi practicing martial arts

டெல்லி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி வீடியோவை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 (இன்று) தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, தற்காப்புக் கலை பயிற்சி மேற்கொண்ட தொகுப்பு பதிவிடப்பட்டு இருந்தது. ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் தற்காப்புக் கலை பயிற்சியாளர் மற்றும் மாணவர்களுடன் அவர் மேற்கொண்ட பயிற்சியானது வீடியோ தொகுப்பாக வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ பதிவில், 66 நாட்களில் 6700 கிமீ தூரம் பயணம் செய்து 15 மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பயணித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. மேலும், நமது எல்லைகளை நாம் உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், ஒரு குறிக்கோள் கொண்டு பயணிக்க வேண்டும் என்றும் வாசகங்கள் ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டு வீடியோ ஆரம்பமாகிறது.

இந்த வீடீயோவில் உரிய பயிற்சியாளர், தற்காப்புக் கலை பயிலும் மாணவர்களுடன் ‘பிளாக் பெல்ட்’ பெற்ற ராகுல் காந்தி பல்வேறு பயிற்சி மேற்கொண்டார். Animal drill எனப்படும் விலங்குகள் போன்ற பயிற்சி, எதிர்பாரா நேரத்து தாக்குதலில் இருந்து தம்மை தற்காத்து கொள்ளும் பயிற்சி ஆகிய பயிற்சிகளை ராகுல் காந்தி, தற்காப்பு கலை மாணவர்களுடன் சில வாரங்கள் மேற்கொண்டார் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ஒரு ‘ஆக்சன் ஹீரோ’ போல, ராகுல் காந்தி பயிற்சி பெறும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவின் கிழே, முறையான பயிற்சி, பயிற்சியாளர் இல்லாமல் இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்