தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!

Default Image

தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள் தற்போது தேசிய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. E1-E 6,F1-F6, G1-G6, H1-H6 அனைத்து பிரிவுகளுக்கும் நீட் தேர்வுக்கான 2020 காண விடைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான ntaneet.nic.in இணையத்தில் இதுகுறித்து தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண்களை அறிய விரும்புபவர்கள் தவிர எந்த பொரிவில் இணையவேண்டும் எனும் குழப்பம் உள்ளவர்களும் இந்த இணையத்தில் பார்க்கலாம்.

மேலும் நீட்தேர்வர்களின் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது, தவறான பதில்களுக்கு ஒரு மதிப்பெண் கழித்தும் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல பதில் எழுதப்படாத வினாக்களுக்கு எந்த மதிப்பெண்களும் வழங்கவும் படமாட்டாது, கழிக்கவும் இல்லை. விடைகளை பார்வையிட nta.ac.in or ntaneet.nic.in பதில் விசை 2020 என கிளிக் செய்யும் பொழுது ஒரு PDF பைல் திறக்கும், அதன் பின் நீட் 2020 என டைப் செய்து பட்டனை கிளிக் செய்யும் பொழுது பதில்கள் வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்