தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை.! அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர்.
  • தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர்.

இது குறித்து அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்தது போல், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுக்க அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கப்படவில்லை என்றார். பின்னர் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட்டு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர்கள் அதனை ஏற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஏழை மக்களுக்கு அரசின் வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பதை தடுத்து விடக் கூடாது என்றும் இரு மாநில முதலமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார். தேசிய மக்கள் தொகை பதிவேடு, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது என்று தெரிவித்த அமித்ஷா, எனவே அதில் மாநில அரசுகள் அரசியல் செய்யக் கூடாது என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்