Meghalaya Election Result: மேகாலயாவில் பாஜக ஆதரவுடன் மீண்டும் தொங்கு சட்டசபை அமைக்கும் தேமக
மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி (யுடிபி) 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மற்ற கட்சிகள் 21 இடங்களில் வென்றுள்ளது.
தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையை அமைக்க தேவையான இடங்களை பெறாததால் பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தொங்கு சட்டசபை அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மீண்டும் தொங்கு சட்டசபை:
முன்னதாக 2018 இல் தேசிய மக்கள் கட்சி உடன் கூட்டணியில் இருந்த பாஜக 5 இடங்களைக் கைப்பற்றியது, ஆனால் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து 60 தொகுதிகளிலும் போட்டியிட்டு 2 இடங்களில் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளது.
கான்ராட் சங்மா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அணுகி அவரது ஆதரவைக் கோரிய உடனேயே, பாரதிய ஜனதா கட்சி (BJP) மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்குமாறு மாநில பாஜக பிரிவுக்கு ஜே பி நட்டா அறிவுறுத்தியுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Adaraniya Sri @JPNadda ji , the national president of the @BJP4India has advised the state unit of BJP, Meghalaya to support the National people’s Party in forming the next government in Meghalaya. @SangmaConrad
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 2, 2023
தேசிய மக்கள் கட்சியின் அமோக வெற்றியைக் கொண்டாடுவதற்காக துராவில் உள்ள முதல்வர் கான்ராட் சங்மாவின் இல்லத்திற்கு வெளியே NPP ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.இந்நிலையில் சங்மா பாஜக ஆதரவுடன் மீண்டும் மேகாலயா முதல்வராக பதவியேற்க உள்ளார்.