நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில்,நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது.
இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து,2010 ஆண்டு யங் இந்தியா நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே,இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பவன்குமார் பன்சால்,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தது.இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி நேரில் ஆஜராக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கும் உத்தரவிடப்பட்டது.
ஆனால்,சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும், ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருந்த காரணத்தினாலும் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. இந்நிலையில்,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார்.அதன்படி,டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.அதே சமயம்,அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் ஆளும் பாஜக அரசு இருப்பதாகவும்,இது அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை எனவும் கூறி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி,சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.இதனால், நுங்கம்பாக்கம்,ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…