நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது.
இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து,2010 ஆண்டு யங் இந்தியா நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே,இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பவன்குமார் பன்சால்,மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தது.
இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராக உள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…