பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கான பட்டாசு விற்பனை நவம்பர் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை தீவுக்கடலில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது . ஏனெனில் கொரோனா சூழல் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டும் அம்மாநிலம் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பட்டாசு வெடிப்பதை வரும் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தடை விதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் மேலும் காற்று மாசுபட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.