வரலாற்றில் இன்று(23.12.2019).. தேசிய உழவர் தினம் இன்று..

Published by
Kaliraj

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை  எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது.

பிறப்பு:

சரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலம்  மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் ஒரு ஜாட் குடும்பத்தில் 1902 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 23-ம் நாள்  பிறந்தார்.இவர் இந்தியாவில் உள்ள இன்றைய ஹரியானாவில் இருந்த பல்லப்கர் என்ற சமஸ்தானத்தின் மன்னராக இருந்த ராஜா நகாரின் சிங்  என்பவரின் அரசில் முக்கியமானவராக இருந்தார். மகாராஜா நகாரின் சிங் 1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கலகத்தில் கலந்துகொண்டு தோல்வியை அடைந்த பின் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார். பின் இவர்கள் குடும்பம் உத்தர பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள  புலன்சாகர் எனும் இடத்திற்க்கு சென்றனர்.

அரசியல் வாழ்க்கை:

இவர் தனது, 34 வயதில் 1937 -ல் பிப்ரவரியில்  உத்தர பிரதேச மாநில  சட்டமன்றத்தில் பாக்பத் மாவட்டத்தின் சப்ரோலி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விவசாயிகளுக்கு எதிரான வியாபாரிகளின் செயல்களை தில்லி மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகள் வெளியிட்டது. அதன் பிறகு  சட்டமன்றத்தில் விவசாய விளைபொருட்களை சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கப்பட்டது.1940-ல் இவ்வாறு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பஞ்சாப் அடைந்தது. இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் சோவியத் முறையில் பொருளாதார சீர்திருத்தத்தை சரண் சிங் எதிர்த்தார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார் அவர்.

 

Related imageRelated image

நேருவின் பொருளாதார கொள்கையின் மீதான தனது திறந்த விமர்சனம் காரணமாக சரண் சிங்கின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பின், சரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று பாராளுமன்ற உறுப்பினரானார். இந்தியாவில் நிகழ்ந்த அவசரகால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண்சிங்கையும் அனைத்து அவரது அரசியல் எதிரிகளையும் சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண்சிங் எனது முதல் அரசியல்  போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார்.

இவரின் சாதனைகள்:

இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங்.  7 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங் ஆவர். இவருடைய ஆட்சியின்போது தான் உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’ என்ற மசோதாவையும்  அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக பல முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.எனவே தான் இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக கொண்டாடிகிறோம். இவர் முதல்வராக இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய உழவர் நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு:

சரண் சிங் மாதம் 29 ம் தேதி 1987 அன்று மரணமடைந்தார். இவரது  மனைவியின் பெயர், காயத்ரி தேவி மற்றும் இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் அஜித் சிங் தற்போது தனது பாரதிய லோக் தள் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Kaliraj

Recent Posts

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு – சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!

சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…

28 minutes ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1280 குறைந்த தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…

45 minutes ago

வக்ஃபு திருத்த மசோதா: தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!

சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

57 minutes ago

live : பரபரக்கும் வக்பு மசோதா விவகாரம் முதல்…ட்ரம்ப் போட்ட அதிரடி வரி வரை!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…

2 hours ago

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…

3 hours ago

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

3 hours ago