சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
அதில், நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை நாம் அனைவரும் முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். இதற்காக நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்று கூறினார்.
மேலும், என் மண் என் தேசம் என்ற பேரியக்கம் தொடங்கப்படும் என்று கூறியதோடு, சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்றும் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…