தேசிய கல்வி கொள்கை 2020.! சமூக அறிவியல் பாடத்தில் ராமாயணம், மகாபாரதம்.!

Ramayana Mahabarata

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்விக்கு , இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளி கல்வி முறை கொண்டுவரும்படியாக தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து அதன் மூலம் பல்வேறு பாடத்திட்ட சீர்திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது.

இந்திய புதிய தேசிய கல்வி கொள்கை 2020ஆனது அடுத்த ஆண்டு இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2024 ஜூலையில் தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) உயர்நிலைக் குழு பாடத்திட்ட பரிந்துரைகளை மேற்கொண்டு வருகிறது.

வழக்கத்தை விட அதிகம்… சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.!

இந்த குழுவின் சமூக அறிவியல் பிரிவானது சி.ஐ.ஐசக் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை பரிந்துரை செய்துள்ளது. அதில், தற்போதுள்ள மாணவர்கள் படித்து முடித்து வெளிநாடு செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய தேசப்பற்று  இல்லை. நமது பண்பாடு வரலாறு தெரிவதில்லை.

இதனை கருத்தில் கொண்டு மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை பள்ளிபாடபுத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், 3 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்து மன்னர்கள் பற்றிய வரலாறும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் சமூக அறிவியல் குழு NCERT குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்