21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமல்படுத்தல் குறித்த பார்வையாளர் மாநாட்டில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கல்வி கொள்கை 2020 அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஒரு சமமான மற்றும் துடிப்பான அறிவு சமுதாயத்தை வளர்ப்பதற்கான பார்வையை அமைக்கிறது. 21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்வி கொள்கை இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும்.
கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கன் குழுவினருக்கு குடியரசு தலைவர் பாராட்டுகளை தெரிவித்து, 2035 ஆம் ஆண்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்) 50 சதவீதமாக உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் நாட்டிற்கு உதவ முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய காலங்களில் இந்தியா உலகளவில் மதிக்கப்படும் கல்வி மையமாக இருந்தது. தக்ஷஷிலா மற்றும் நாலந்தாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய வாய்ந்தவையாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசையில் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை அதிகப்படியான விமர்சன சிந்தனையையும் விசாரணை மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…