தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி- ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்!
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டுமென, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்க அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில ஏற்கனவே வயநாடு எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது.