குடியுரிமை சட்ட விவகாரம்… ஜாமின் இல்லாத பிரிவிகளில் வழக்கு பதிவு.. மம்தா அரசு திடீர் நடவடிக்கை..
- மேற்கு வங்கம் மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்களின் மீது ஜாமினில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 11ம் தேதி கோல்கத்தா வந்திருந்தார். அங்குள்ள, துறைமுக பொறுப்பு கழகத்தின், 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அந்த துறைமுகத்திற்கு ஷியாம பிரசாத் முகர்ஜி என பெயரும் சூட்டினார். அப்போது, பிரதமர் மோடி தங்கியிருந்த இடத்திற்கு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்பினர்,பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்து, பிரதமர் மோடியை சந்தித்தார்.பின் பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த மம்தாவை, இடதுசாரி மாணவர்கள் முற்றுகையிட்டு, மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனக்கூறிய, மம்தா, மாணவர்கள் போராட்டத்திலும் சிறிது நேரம் பங்கேற்றார். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாத, 150 பேர் மீது, அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உட்பட ஜாமினில் வெளிவர முடியாத சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மம்தா பேனர்ஜின் முடிவு மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.