தேசிய குடியுரிமை சட்டத்திற்க்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு… கருத்துகணிப்பில் அதிரடி ஆதரவு என தகவல்…
- தேசிய குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் பெரும் போராட்டத்தை கையில் எடுத்தனர்.
- இந்நிலையில் இந்த சட்டத்திற்க்கு இந்திய அளவில் அதிகமக்கள் ஆதரவு என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா முழுவதும் 65.4 %மக்களும்,வண்முறை அதிகம் நடைபெற்ற்ற அசாமில் மட்டும் 76.9 சதவீதம் பேர் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவு நடைமுறைப்படுத்துவதை ஆதரிப்பதாக ஐ.ஏ.என்.எஸ்., மற்றும் சி.ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போது தெரியவந்துள்ளது. இவை நாடு முழுவதும் சுமார் 3000 பேரிடம் கடந்த டிசம்பர் மாதம் , 17, 18, 19 தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், அசாம் மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள் தலா 500 பேரிடமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி, நாடு முழுவதும் 65.4 %மக்கள் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவை அமல்படுத்த விரும்புகிறார்கள் எனவும், 28.3 %மக்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும், மேலும், 6.3 %இந்த விவகாரத்தில் பதிலளிக்க விரும்பவில்லை அல்லது அதை பற்றி தங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர். இருந்த போதிலும், முஸ்லிம்களிடையே நடத்திய ஆய்வில் என்.ஆர்.சி., நடைமுறைப்படுத்துவதை 66.2 %விரும்பவில்லை என்றும், 28.5 %முஸ்லிம்கள் மட்டுமே ஆதரித்துள்ளனர். இதேபோல், ஹிந்துக்களில் 72.1 % பேர் ஆதரிப்பதாகவும் 21.3 %பேர் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர். இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் 73.4 %மக்கள் என்.ஆர்.சி.,யை செயல்படுத்தும் சட்டத்திற்க்கு ஆதரித்தனர், ஏற்கனவே அசாமில் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் என்.ஆர்.சி., கணக்கெடுப்பின் படி 76.9 % பேர் அதை செயல்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று தெரிவித்தது.