இந்த மசோதாவிற்க்கு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 6 பேர் பலியாகினர். இந்தநிலையில் இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் மகாதீர் முகமது, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், இதேபோன்று ஒரு நடவடிக்கையை நாங்கள் மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். இங்கே குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் இங்கு வந்த சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளோம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூடன் நாங்கள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார். குடியுரிமை விவகாரத்தில் மலேசிய பிரதமரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…