குடியுரிமை திருத்த விவகாரம்… நாங்களும் அமல்படுத்தினால் என்ன நடக்கும்.. மலேசிய பிரதமர் காட்டம்….

Default Image
  • இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  குடியுரிமை திருத்த மசோதா  இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்டதிருத்தத்திற்க்கு மலேசிய பிரதமரி காட்டமான கருத்து.

இந்த மசோதாவிற்க்கு  எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி  இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக  பல்வேறு சர்ச்சைகள் வலுத்து வரும்  நிலையில், நாட்டின் தலைநகர்  டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 6 பேர் பலியாகினர். இந்தநிலையில் இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் மகாதீர் முகமது, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது  மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், இதேபோன்று ஒரு நடவடிக்கையை நாங்கள் மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். இங்கே  குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் இங்கு வந்த  சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளோம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூடன் நாங்கள்  அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார். குடியுரிமை விவகாரத்தில் மலேசிய பிரதமரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்