தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்..!!! எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை எதிர்த்து போராட்டம்..!! டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு..!!

Default Image
  • தேசிய குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு.
  • அதே பல்கலைகழக மானவர்கள் இம்மசோதாவிற்க்கு ஆதரவாக போராட்டம்.
தேசிய குடியுரிமை திருத்த மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து   வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக  போலீசார் நுழைந்து மாணவர்களை அத்துமீறி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து,  ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த  மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது டெல்லி காவல் துறைக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த எதிர்ப்பு போராட்டத்தால்  ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரு பிரிவினராக போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டங்களால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal