குடியுரிமை திருத்த விவகாரம்.. போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூடு.. இருவர் பலி அங்கு உச்சகட்ட பரபரப்பு..
- குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
- இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானதால் பதற்றம்.
இந்தியாவின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த போராட்டங்கள் வண்முறையாக மாறிவரும் நிலயில் காவல்துறையினர் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் முழுகவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், கர்நாடாக மாநிலம் மங்களூருவில் இந்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.