குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு கடும் எதிர்ப்பு…!!! வன்முறை வெடித்தது…!!!திரிபுராவில் இணைய சேவை முடக்கம்…!!! பதற்றம் தொடர்கிறது…!!!
- குடியுரிமை மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
- இந்த மசோதா சட்டமாக நிறைவேறும் போது தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அங்கு வாழும் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் தவறான செய்திகளும், வதந்தியும் வேகமாக பரப்பப்பட்டு வந்தது. இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள காஞ்பூர் பகுதியில் இன்று பழங்குடியின மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் தீ வைத்தும் கொளுத்தப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தவறான செய்திகள் மற்றும் தகவல்கள் பரவாமல் இருக்க திரிபுரா மாநிலம் முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவைகளின் தடை 48 மணி நேரத்திற்கு தொடரும் என திரிபுரா மாநில அரசு சார்பில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.