தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை…!!! அமித் ஷா தடாலடி அறிவிப்பு..!!!
- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் உறுதியாக அமலாகும்.
- இந்த சட்டத்திலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கருத்தரங்கில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, ”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதை எதிர் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபடுவோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது, எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல் நாங்கள் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறமாட்டோம். திரும்பப் பெறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீர்மானமாக இருக்கிறது எங்கள் அரசு என்றார், இவரது கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய்யுள்ளது.