நாசிக் ஆக்சிஜன் வாயுக்கசிவு…! இரங்கல் தெரிவித்த அமித்ஷா…!
தங்கள் அன்புகுரியவர்களை இழந்த குடும்பகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு டேங்கரில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த டேக்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்ட போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது.
இதனையடுத்து, கசிவு காரணமாக 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அங்கு சிகிச்சைபெற்று வந்த 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவதில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள அமித்ஷா, ‘விபத்து பற்றிய செய்தியை கேட்டு வேதனையடைகிறேன். இந்த சம்பவத்தில் தங்கள் அன்புகுரியவர்களை இழந்த குடும்பகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.