இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது நாசி தடுப்பூசிக்கான 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு DCGI இன் ஒப்புதலை கடந்த மாதம் கேட்டிருந்தது. பயோடெக் நிறுவனம் ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பு DCGI நிபுணர் குழுவிற்கு நாசி தடுப்பூசி பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான மூன்றாவது சோதனை இதுவாகும். மூக்கு வழியாக போடப்படும் இந்த தடுப்பூசி, ஓமிக்ரானில் இருந்தும் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாரத் பயோடெக் தனது நாசி தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த பூஸ்டர் டோஸ் முன்பு கோவிஷீல்டு அல்லது கோவாசின் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. வழக்கமான தடுப்பூசியை விட மூக்கு வழியாக கொடுக்கப்படும் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மூக்கின் வழியாக தடுப்பூசி போடும்போது முதலில் ஆன்டிபாடிகள் மூக்கில் உருவாகின்றன. இது சுவாசத்தின் மூலம் வைரஸ் நுரையீரலுக்குள் நுழைவதை கடினமாக்குகிறது. இதன் விளைவாக நுரையீரலை வைரஸ் சென்றடையாது என கூறப்படுகிறது.
இந்த மாதம் முதல் நாட்டில் முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் (பூஸ்டர் ) தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சௌமியா விஸ்வநாதன், நாசி தடுப்பூசியின் பயன்பாடு பற்றி குறிப்பாகப் பேசினார். இது எந்த வலியையும் ஏற்படுத்தாது என்றும், அதை எடுக்க அதிக செயல்முறை தேவையில்லை என்றும் கூறினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா மற்றும் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசித்ரா எல்லா இருவருக்கும் மத்திய அரசு உயரிய பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…