2100 ஆம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்ப நிலை உயர்ந்து வருவது குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள ஐபிசிசி அறிக்கையில், மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக பனிப்பாறைகள் உடைந்து, கடல் நீர்மட்டம் உயர்ந்து, வெப்ப அலைகள் தாக்கம் பூமியில் அதிகரிக்கும் எனவும், இதனால் பஞ்சம் மற்றும் வறட்சி ஏற்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள் கடலுக்கு அடியில் 2.7 மீட்டர் ஆழத்தில் முழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…