இந்த ஆண்டின் முதல் ‘ஓநாய்’ சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது..சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் நாசா அறிவிப்பு.!

Default Image
  • 2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி (இன்று ) தெரியும் என நாசா அறிவித்திருந்தது.
  • இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இது ஓநாய் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் கடைசியில் சூரிய கிரகணம் டிசம்பர் 26 அன்று நிகழ்ந்தது. அடுத்த 2031-ல் மே மாதம் தெரியவரும் என நாசா அறிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி (இன்று) தெரியும் என நாசா அறிவித்திருந்தது. இந்த ஆண்டில் மொத்தம் 2 சூரிய கிரகணமும் 4 சந்திரகிரகணமும் நிகழ உள்ளதாக நாசா தெரிவித்தது. அதில் முதல் சந்திரகிரகணம் இன்று இரவு 10 மணிக்கு மேல் நிகழ்கிறது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இது ஓநாய் சந்திர கிரகணம் அதாவது Wolf Moon Eclipse என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது. கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.  இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா.

மேலும் இதை இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது. இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்றும், 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்