பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பிரதமர் மோடி நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது வருகிறார்.இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் மோடி எதிர்க் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது.கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…