வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் பேரணிநடைபெற்றது.
இந்நிலையில் இன்று வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.