பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகை !குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கொச்சி வந்தடைந்தார்.கொச்சியில் இருந்து குருவாயூர் சென்று பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின் அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.