2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி !குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரசகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் நாட்டின் 17வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.