உள் நாட்டில் தாயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

Default Image
  • உள் நாட்டில் தாயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • மேலும்  இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில் ,உள் நாட்டில் தாயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.பொங்கல் பண்டிகையின் இறுதி நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் .

இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர். இளமைக்கால பயன்பாட்டை நம்பியே ஒருவரின் எதிர்காலம், வாழ்க்கை ஆகியவை உள்ளது நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்க 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமாக பங்களிப்பார்கள்.

அராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெளிவாகத் தெரிகிறது .குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர் – வேண்டாதவர் பாகுபாடு போன்றவற்றை இளைஞர்கள் விரும்புவதில்லை.கல்வி நிலையங்களில் படிப்பை நிறைவு செய்த பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது சுகமான அனுபவம். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிலையங்களில் நூலகம் போன்றவற்றை அமைத்து தரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்