நிரவ் மோடியின் வாங்கி மோசடி தொடர்பாக அவரது சொத்துக்களை முடக்கி வரும் அமலாக்க துறையினர், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் முடக்கியுள்ளனர்.மேலும் பல்வேறு சொத்துக்களை முடக்கப்போவதகவும் தகவல்கள் உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமான பணபரிவர்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(47) மீது, கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 16 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், மோடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.523.72 கோடி மதிப்பிலான 21 அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…