ரூ.3000 பென்சன் திட்டம் ! ராஞ்சியில் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்புதான் 60 வயதை அடைத்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆகும் .இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் வைக்கப்பட்டது.
இன்று இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.