பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்களும் ஆதாரங்கள் பிரதமர் மோடி !!!
- பாலகோட் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
- பிரதமர் மோடி காஜியாபாத் பொதுக் கூட்டத்தில் பேசிய போது பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்களும் என்னுடைய ஆதாரங்கள்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 26-ம்தேதி இந்தியாவின் மிராஜ் 2000 என்ற போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தின.
பாலகோட் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர்களும் ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி காஜியாபாத் பொதுக் கூட்டத்தில் பேசிய போது பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்களும் என்னுடைய ஆதாரங்கள்.ஆகவே பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.
.