கொரோனா தடுப்பு பணியில் இந்தியா முதலிடம் ! மோடிக்கு குவியும் பாராட்டுக்கள் !
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பிரதமர் மோடி 68 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மேன்யூவல் லோபஸ் ஒப்ராடர் இரண்டாவது இடத்தையும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.