கட்சியின் தலைவர் ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்து சொன்னவர்தான் நாராயணசாமி – பிரதமர் மோடி பேச்சு

Default Image

காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் நடைபெற்ற பாஜக  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுவை அரசு அனைத்து நிர்வாகத்தையும் அழித்தது.மோடி புதுச்சேரி காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.

புயல் பாதிப்பு குறித்த பெண்ணின் முறையீட்டை, தன் கட்சியின் தலைவரிடம் தவறாக மொழிபெயர்த்து சொன்னவர்தான் நாராயணசாமி. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பொய்யர்களை பொதுமக்களால் எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலை நடத்த மறுத்தது காங்கிரஸ் அரசு.ஜனநாயக விரோத காங்கிரஸுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.201 6ஆம் ஆண்டில் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது .காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது .குஜராத்  மாநகராட்சி தேர்தலில் பிற கட்சிகளை விட 10 மடங்கு வெற்றியை பாஜக பெற்றது.மீன்வளத்துறை அமைச்சகத்துக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்கிறது காங்கிரஸ். மீன்வளத்துறைக்கு ஏற்கனவே தனி அமைச்சகமே இருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறைத்துவிட்டனர்.

புதுச்சேரியில் கல்வி கட்டமைப்பை உருவாக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள் ஆகும்.உள்ளூர் மொழியில் மருத்துவ கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கடல் சார்ந்த துறை மற்றும் கூட்டுறவு சார்ந்த துறையை வலுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு மீன்வளத்துறைக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொய் சொல்வதற்கு தங்கம் ,வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman
Telangana Govt Inner Reservation