நாரதா முறைகேடு விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த 2014ம் ஆண்டில், மேற்குவங்காளத்தில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நாரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது.
இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது. இதனையடுத்து, அவர்களுக்கு சி.பி.ஐ ஜாமீன் அளித்தது. ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சி.பி.ஐ. 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த வாரம், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது.
இதனையடுத்து, இன்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை, 4 பேரும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…