மது அருந்திவிட்டு நாகினி ஆட்டம் போட்ட காவலர்கள்.!

தெலுங்கானா மாநிலம் சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள், அவர்களின் சக காவலர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அருகில் உள்ள பகுதியில் மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடியுள்ளனர். பின்னர் நடனம் ஆடும் போது அவர்கள் சீருடையிலோ, பணியிலோ இல்லை என்று தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு திறந்த வெளியில் நடனம் ஆடியதை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் காவல் ஆய்வாளர் ஒருவரும் இதேபோன்று மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடிய வீடியோ வைரலான நிலையில் இரு சம்பவங்கள் குறித்தும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025