நாயின் பெற்றோர் பெயர் என்ன? கொலை புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த போலீஸ்!
ஆந்திரா மாநிலத்தில் வளர்ப்பு நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா : திருப்பதியில் திவ்யா என்கிற பெண் 2 லட்சம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். டாமி என்கிற இந்த நாய் டிசம்பர் 10-ஆம் தேதி இருவரை பார்த்து குறைத்த நிலையில், அந்த நாயை இரண்டு பேர் முதலில் கல்லை வைத்து எறிந்துள்ளனர். இருப்பினும் நாய் குறைத்ததை நிறுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் திவ்யா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கமாக கூறி உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்யுமாறு புகார் அளித்தார். இதனையடுத்து, காவல்துறையினர் நாயின் பெற்றோர்கள் பெயர் என்னவென்று தெரியாமல் கைது செய்யமுடியாது என நாயின் உரிமையாளரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் மனமுடைந்து வேகமாக காவல்நிலையத்தை விட்டு வெளியில் வந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி “இப்படி சம்பவம் நடந்தது இதில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்யவில்லை நாயின் பெற்றோர்களின் பெயர்களை கேட்கிறார்கள்” என வேதனையுடன் பேட்டிகொடுத்தார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை வெட்டி கொலை செய்த சிவகுமார் மற்றும் இ சாய் குமார் இருவரையும் மிருகவதை தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்தனர்.