கர்நாடக மாநிலத்தின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் பதவி ஏற்பு
கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவின் எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா.
எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டார். புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்து பாஜக தலைவர் அமித் ஷா உத்தரவை பிறப்பித்தார். நளின் குமார் காடீல் எம்.பியாக உள்ளார் நிலையில் அவருக்கு கர்நாடக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் பதவி ஏற்றுள்ளார்.