பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நக்சலைட்டுகள் காவல்துறையிடம் சரணடைந்தனர்…
ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தீவிரவாத கும்பலை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தியும் வருகின்றனர். மேலும், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளாக செயல்பட்டுவந்த பெண் உள்பட 3 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு நேற்று காவல்துறையில் சரணடைந்தனர்.