நாகாலாந்து முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்பு.!
நாகாலாந்து மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்றார்.
நாகாலாந்து மாநில முதல்வராக பதவியேற்ற நெய்பியு ரியோவிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நாகாலாந்து மாநிலத்தில் தொடர்ந்து 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராகப் பதவியேற்றுள்ளார். நாகாலாந்து தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் இரு கட்சிகளும் 37 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்றன.