நாக்பூர்:1 மணி நேர இடைவெளியில் கொரோனாவால் உயிரிழந்த கணவன்-மனைவி.!

Default Image

கொரோனாவால் 66வயதான கணவன் மற்றும் மனைவி 1மணி நேர இடைவெளியில் நாக்பூரில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திங்களன்று நாக்பூரை சேர்ந்த 66 வயதான நபருக்கு உடல்நிலை மோசமடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அவரது உடல் மோசமடைய கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, அன்று இரவில் அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமடைய, அவர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். மனைவி இறந்த 15-20 நிமிடங்களில் 66 வயதான அவரது கணவரும் கொரோனாவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனையடுத்து அவரது 39 வயதான மகனுக்கும், 33 வயதான மருமகள், 14 வயதான பேத்தி மற்றும் 4 வயதான பேரனுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதனை பேரனை தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இறந்த அனைவரும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan