கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள்! கங்குலிக்கு அறிவுரை கூறிய நக்மா!
- குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார்.
- இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சவ்ரவ் கங்குலி, தனது டிவிட்டர் பக்கத்தில், ;ஏஎனது மகள் சின்ன பொண்ணு. அவளுக்கு இங்கு நடக்கும் அரசியல் பற்றி தெரியாது. ‘ என்பது போல பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மகிலா காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் நடிகையுமான நக்மா, தனது டிவிட்டர் பக்கத்தில், கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள். அவளை பாராட்டுங்கள். என கங்குலியை டேக் செய்தும், வாழ்த்துக்கள் கூறுகிறேன் என சனாவை டேக் செய்தும் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Please keep Sana out of all this issues .. this post is not true .. she is too young a girl to know about anything in politics
— Sourav Ganguly (@SGanguly99) December 18, 2019
I congratulate @sanaganguly on her views on the current situation prevailing in the country& urge her & @SGanguly99 that he Should allow her to share her views freely & encourage her thoughts to let it make known them in the publidomain after knowing that she eligible age tovote
— Nagma (@nagma_morarji) December 20, 2019