நாகாலாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் காலமானார்..!

நாகாலாந்தின் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள சி.எம்.சாங் காலமானார். அவருக்கு வயது 78.
நாகாலாந்தில் உள்ள நோக்சென் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சாங் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
2009 தேர்தலில் அவர் நாகாலாந்து மக்களவைத் தொகுதியில் இருந்து 15 வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில், அவர் நோக்சென் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி அமைச்சரானார்.
சாங் 2003, 2008, 2013 சட்டமன்றத் தேர்தலிகளிலும், 2009 மக்களவைத் தேர்தலிலும் என்.பி.எஃப் கட்சி சார்பில் போட்டியிட்டார். பின்னர், 2018 ஆம் ஆண்டில் அவர் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியில் சேர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025