கார்டியோஜெனிக் அதிர்ச்சியால் நபா கிஷோர் மரணம்..! பிரேத பரிசோதனை அறிக்கை..!

Default Image

ஒடிசாவில் சுகாதார துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கார்டியோஜெனிக் அதிர்ச்சியால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. 

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் பிரஜ்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நபா தாஸ் தனது காரில் இருந்து இறங்கிய போது போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் அவரது மார்பில் சுட்டுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் மரணமடைந்தார்.

naba kishore das

ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மறைந்த அமைச்சர் நபா கிஷோர் தாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நபா கிசோர் தாஸ், சுட்டு கொல்லப்பட்டதையடுத்து புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நிரஞ்சன் பூஜாரி நியமிக்கபட்டார்.

Niranjan Pujari

இதனையடுத்து வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒடிசா சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டதையடுத்து, அவருக்கு கார்டியோஜெனிக் அதிர்ச்சி(Heart Attack) ஏற்பட்டுள்ளது. இதனால் நபா கிஷோர் மரணம், அதிர்ச்சி ஏற்பட்டதால் நடந்த இயற்கையான மரணம் என்று ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்