டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது… மென்பொருள் மூலம் உருவ ஒப்பீடு நடைபெறுகிறது… விரைவில் அதிரடி நடவடிக்கை…
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் மற்றும் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் வன்முறையாக மாறியது, இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. அப்போது இது விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , டெல்லி கலவரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் சாதி, மத, கட்சி பாகுபாடின்றி நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இது தொடர்பாக 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை 2,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோலி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதால் அரசு அமைதி இருந்ததே தவிர, இதில் இருந்து ஓடவில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பான வீடியோக்கள் ஆராயப்பட்டு அவர்களுடைய உருவ ஒற்றுமை ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஒரு சிறப்பு மென்பொருள் மூலம் ஒப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த ஒப்பீடு செய்வதில் ஆதார் தகவல் பயன்படுத்தப்படவில்லை. இதனால் தனிநபர் ரகசியம் மீறப்படவில்லை. முகத்தை அடையாளம் காட்டும் மென்பொருள் மூலம் மட்டும் 1922 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கொலை, வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமித்ஷா விளக்கம் அளித்தார்.